சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?


சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?
x
தினத்தந்தி 8 July 2020 4:25 PM IST (Updated: 8 July 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.அதுவும் ஜூன் மாதம் இறுதியில் நாளொன்றுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு 2000 தாண்டியே பதிவானது. ஜூன் 30 தேதி அதிகபட்சமாக 2393 பேருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மக்களின் எதிப்பார்ப்பிற்கு நம்பிக்கையூட்டும் விதமாக சென்னையில் கடந்த 7 நாட்களாக அதாவது ஜூலை மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் ஜூன் 30ம் தேதி 2393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுசிசெய்யப்ட்ட நிலையில் ஜூலை 1-ம் தேதி பாதிப்பு குறைந்து 2182 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது.ஜூலை 2ம் தேதி  2027 பேருக்கும், ஜூலை 3-ம்  தேதி பாதிப்பு சற்று அதிகரித்து 2082 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜுலை 4-ம் தேதியில் பாதிப்பு கணிசமாக குறைந்து  1842 ஆக குறைந்தது. ஜூலை 5-ம் தேதி பாதிப்பு  1713 ஆகவும், ஜூலை  6-ம் தேதி சற்று அதிகரித்து  1747 ஆகவும் இருந்த பாதிப்பு, ஜூலை 7-ம் தேதியான நேற்றைய தினம் நம்பிக்கையூட்டும் விதமாக  1203 ஆக குறைந்துள்ளது.

இதனால் சென்னையில் ஜூலை மாதத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story