வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 28 பேருக்கு கொரோனா
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த 25 ஆயிரத்து 876 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 448 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் குவைத்தில் இருந்து வந்த 16 பேருக்கும், ஓமனில் இருந்து வந்த 5 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 4 பேருக்கும், பக்ரைன், கிர்கிஸ்தான், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 71 ஆயிரத்து 444 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்தது.
ஆலந்தூர் மண்டலத்தில் 35 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 91 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 17 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 6 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
பூந்தமல்லி நகராட்சி கமிஷனரின் கார் டிரைவர் மற்றும் சுகாதார பிரிவில் பணிபுரியும் ஊழியர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் நகராட்சி கமிஷனர் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story