தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது ஒரு பவுன் ரூ.37,536-க்கு விற்பனை
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. கடந்த 1-ந்தேதி பவுனுக்கு ரூ.424 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 472 ஆக உயர்ந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.38 மட்டும் உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென்று தங்கம் விலை எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 8-க்கும் விற்பனையானது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.66-ம், பவுனுக்கு ரூ.528-ம் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 692-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 536-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800-ம் அதிகரித்தது. ஒரு கிராம் 54 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.54 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

Related Tags :
Next Story