மின்சார அளவு மொத்தமாக கணக்கிட்டதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
கொரோனா ஊரடங்கில் மின்சார கட்டணத்தை கணக்கிட்டதில், வழக்கத்தை விட அதிக தொகை வந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா ஊரடங்கில் மின்சார கட்டணத்தை கணக்கிட்டதில், வழக்கத்தை விட அதிக தொகை வந்துள்ளது. மின்சார ஊழியர்கள் 4 மாதங்களுக்கான மின் கட்டணத்தை மொத்தமாக கணக்கிட்டதால் இந்த நிலை வந்துள்ளது. எனவே 2 மாதங்களாக பிரித்து கணக்கிட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மொத்தமாக மின்சாரத்தை கணக்கிடுவதால், பொதுமக்களிடம் இருந்து மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கூடுதலாக சுமார் ரூ.900 கோடி வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மின்சார கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ‘ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது. இது போன்ற சூழலில், மின்சார சட்ட விதிகளின் அடிப்படையில், மின்சார அளவு கணக்கிடப்பட்டுள்ளது‘ என்று வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story