மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம் + "||" + Corona impact in Chennai Increase 2-fold The average is 25 days Corporation Statistics

சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்

சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்
சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது என்று சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை, 

சென்னையில் முழு ஊரடங்கு பிறகு கொரோனாவின் தாக்கம் படிபடியாக குறைய தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் புள்ளி விவரம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கடந்த மார்ச் மாதம் முதல் கடந்த 6-ந்தேதி தேதி வரை உள்ள கணக்கீட்டின்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பதற்கு சராசரியாக 25 நாட்கள் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மண்டலவாரியாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராயபுரம்-57.1 நாட்கள், தண்டையார்பேட்டை- 32.7 நாட்கள், திரு.வி.க.நகர்-32.4 நாட்கள், தேனாம்பேட்டை-32.2 நாட்கள், மாதவரம்- 31.7 நாட்கள், பெருங்குடி-29.8 நாட்கள், கோடம்பாக்கம்- 28.8 நாட்கள், அண்ணாநகர்- 27.4 நாட்கள், மணலி- 27.3 நாட்கள், திருவொற்றியூர்- 26.8 நாட்கள், அடையாறு- 24 நாட்கள், அம்பத்தூர்- 23.2 நாட்கள், சோழிங்கநல்லூர்- 22.4 நாட்கள், வளசரவாக்கம்- 22.2 நாட்கள், ஆலந்தூர்- 20.2 நாட்களில் கொரோனா தொற்று இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

(இதில் புள்ளிக்கு அப்புறம் வரும் எண்கள் நேரத்தை குறிப்பது ஆகும். அதாவது ராயபுரம் மண்டலத்தில் 57 நாட்கள் ஒரு மணி நேரம் என்று பொருள் ஆகும்.)