ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் - மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு
ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது கட்டமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய் யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்தது. இதுவரை 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story