ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்தியக் குழு ஆய்வு


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்தியக் குழு ஆய்வு
x
தினத்தந்தி 9 July 2020 11:18 AM IST (Updated: 9 July 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்தியக் குழு ஆய்வு செய்தது.

சென்னை,

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக  மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த மத்திய ஆய்வு குழு தலைவர் ஆர்த்தி அகுஜா, மிண்ணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் செங்கல்பட்டில் ஆய்வு செய்தனர்

3 வது முறையாக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,   இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை சென்ற மத்தியக் குழு, அங்கு  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.


Next Story