திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி


திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 July 2020 11:46 AM IST (Updated: 9 July 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் முதலில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூரில் ஒரு வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story