காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சிபிஐ-யும் இரு வழக்குப்பதிவை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சிபிஐ தனதுவிசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். காணொலி வாயிலாக இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனுவை வரும் 13 ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Tags :
Next Story