ராதாபுரம் குடிநீர், பாசன வசதிக்காக கோதையாறு அணைகளில் இருந்து 15-ந்தேதி தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ராதாபுரம் குடிநீர், பாசன வசதிக்காக கோதையாறு அணைகளில் இருந்து 15-ந்தேதி தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 3:08 AM IST (Updated: 10 July 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் குடிநீர், பாசன வசதிக்காக கோதையாறு அணைகளில் இருந்து 15-ந்தேதி தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 15-ந் தேதியில் இருந்து வரும் ஆகஸ்ட் 13-ந் தேதிவரை 30 நாட்களுக்கு, விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால் கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story