தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 30 விழுக்காடு பாடங்கள் குறைப்பு?
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 விழுக்காடு பாடங்கள் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை,
கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், 107 வது நாளாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால், நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் பாடச்சுமை 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது. ஒரு ஆண்டுக்கு மட்டும் இந்த பாடக்குறைப்பு இருக்கும் என சிபிஎஸ்இ அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகித விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அடுத்த வாரம் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Tags :
Next Story