விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மின்னல் வேகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,595 ஆக இருந்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,724 ஆகஉயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது வரை 1,080 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ரனர். இதுவரை 644 பேர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.
மாவட்டத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Related Tags :
Next Story