அமைச்சர் செல்லூர் ராஜு விரைவில் நலம் பெற வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


அமைச்சர் செல்லூர் ராஜு விரைவில் நலம் பெற வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 10 July 2020 3:30 PM IST (Updated: 10 July 2020 3:30 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து  பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் 8 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செல்லூர் ராஜூ மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லுர்ர் ராஜூ விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story