புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 4:04 PM IST (Updated: 10 July 2020 4:04 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதாமாக் புதுச்சேரியில் 6 வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுசேரியிலும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story