சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம், 2 வழக்குகளின் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். தணிக்காச்சலம் மீது மேலும் இரு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டம் உள்ளதால், தற்போது சிறையில் இருந்து விடுதலையாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story