கொடிவேரி தடுப்பணையை சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு


கொடிவேரி தடுப்பணையை சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு
x
தினத்தந்தி 10 July 2020 7:02 PM IST (Updated: 10 July 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரை தடுத்து, கொடிவேரி தடுப்பனையை செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் மன்னன், சுமார் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. இந்த தடுப்பணையை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கொடிவேரி தடுப்பணை பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை சுற்றுலா தளமாக மாற்றும் பணியை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன், 2 கோடியே 55 லட்சம் ரூபாய் நிதியில் பணிகள் துவங்க உள்ளதாக கூறினார்.

Next Story