முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சென்னை,
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வதேச ரோட்டரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவித்து வருகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ‘பவுல் ஹாரிஸ் ஃபெல்லோ’ (Paul Harris Fellow) என்னும் கவுரவ விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து இந்த விருதுக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதாக சர்வதேச ரோட்டரி அமைப்பு அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு, ‘பவுல் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்ற சிறப்பு விருதை வழங்கி அமெரிக்க நிறுவனம் அவரை கவுரவித்துள்ளது.

Related Tags :
Next Story