ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்


ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 11 July 2020 1:50 PM IST (Updated: 11 July 2020 1:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி  நடைபெறுகிறது.  தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் , தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும்  ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. 

 தமிழகத்தில் சென்னையில் முன்பை விட நோய்த்தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. அதேவேளையில் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story