கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 11 July 2020 5:18 PM IST (Updated: 11 July 2020 5:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த 27 பேர் உள்பட மொத்தம் 64 பேர் மரணம் அடைந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்தது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசியல் பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஏற்கனவே, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை
மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியிலும், அமைச்சர் பி.தங்கமணி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னும் குணம் அடையாத நிலையில், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் அவர் உடனடியாக மியாட் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவார்.

இந்நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story