மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி + "||" + Plasma treatment has been a great success in Tamil Nadu - Minister Vijayabaskar

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தான் அதிக எண்ணிக்கையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக் கும் என்று அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
4. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி அமல் - அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.