கன்னியாகுமரியில் வேகமெடுக்கும் கொரோனா: மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கன்னியாகுமரியில் வேகமெடுக்கும் கொரோனா: மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 July 2020 8:17 AM IST (Updated: 12 July 2020 8:17 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொத்து, கொத்தாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் முதலில் கொரோனா தொற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் பாதிப்பு இருந்தது. வடசேரி தற்காலிக சந்தை செயல்பட்டு வந்த பஸ் நிலையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நாகர்கோவிலில் தொற்றின் வேகம் அதிகரித்தது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக பல இடங்கள் உருவானது.

இதற்கிடையே கோட்டார் மார்க்கெட்டையும் கொரோனா பதம் பார்த்தது. அங்கு முதலில் ஒரே கடையை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கம்பளம் பகுதியில் ஒரு வியாபாரிக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு கோட்டார் மார்க்கெட்டுக்கு வந்து சென்ற 20 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோழிவிளை அகதிகள் முகாமில் உள்ள  38 பேர் உட்பட 117 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கன்னியாகுமரியில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

Next Story