கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை


கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2020 2:13 PM IST (Updated: 12 July 2020 2:13 PM IST)
t-max-icont-min-icon

கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கால் கால் டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதுடன், அத்தியாவசியத் தேவைகளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் வரி மற்றும் மாதத் தவணைகள் கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு மேலும் சுமையை கூட்டும் வகையில் உள்ளது. ஓட்டுனர்களின் மனக் குமுறல்களை கருத்தில் கொண்டு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Next Story