கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு - விருத்தாச்சலம் நகராட்சி அறிவிப்பு


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு - விருத்தாச்சலம் நகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2020 4:53 PM IST (Updated: 12 July 2020 4:53 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதலில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். நேற்றுவரை மாவட்டத்தில் 1,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் விருத்தாச்சலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது. 

இதில் பால், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் எனவும் விருத்தாச்சலம் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Next Story