தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை


தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 12 July 2020 6:24 PM IST (Updated: 12 July 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,617 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story