தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 4:31 AM IST (Updated: 13 July 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அதிலும் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சிலஇடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘செந்துறை, பொன்மலை தலா 11 செ.மீ., மைலாம்பட்டி 10 செ.மீ., லால்குடி 8 செ.மீ., திருச்சி, சமயபுரம், புல்லம்பாடி, மருங்கபுரி தலா 7 செ.மீ., காஞ்சீபுரம் 6 செ.மீ., சோளிங்கர், விருதுநகர், துவாக்குடி, ஆற்காடு தலா 5 செ.மீ. மழைபெய்துள்ளது.

Next Story