கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!

கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
x
தினத்தந்தி 13 July 2020 9:17 AM IST (Updated: 13 July 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.

சென்னை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.  அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது.

2-வது நாளாக இன்றும் டீசல் லிட்டருக்கு,10 காசுகள் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து  வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.

Next Story