தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.
சென்னை
குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-
வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது
தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாக கூறினார்
Related Tags :
Next Story