சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல்


சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல்
x
தினத்தந்தி 13 July 2020 5:08 PM IST (Updated: 13 July 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ மனு மீது மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story