சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றியது சிபிஐ


சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றியது சிபிஐ
x
தினத்தந்தி 13 July 2020 6:57 PM IST (Updated: 13 July 2020 6:57 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்தது.

தூத்துக்குடி,

சாத்தான் குளம் தந்தை, மகன் சந்தேக மரணம் என பதிந்திருந்ததை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்தது.வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகுகணேஷை சிபிஐ சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றபட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story