மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ + "||" + CBI begains investigation on sathankulam incident

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு:  ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியது.
மதுரை,

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய 10 பேரில்,  முதலில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜை ஆகிய 5 பேரையும் காவலில் எடுக்க சிபிஐ  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற்றது.

சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில்,
3 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 5 பேரும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் மேலும் ஒரு சி.பி.ஐ. அதிகாரிக்கு கொரோனா
சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் மேலும் ஒரு சி.பி.ஐ. அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவு
சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளது.
3. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.