எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விபரம்


எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விபரம்
x
தினத்தந்தி 14 July 2020 8:03 PM IST (Updated: 14 July 2020 8:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்று ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில்  சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  சென்னைக்கு அடுத்தபடியாக  மதுரையில் 450 பேருக்கும், திருவள்ளூரில் 360 பேருக்கும், விருதுநகரில் 328 பேருக்கும், செங்கல்பட்டில் 264 பேருக்கும், வேலூரில் 194 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 106 ஆய்வகங்கள் (அரசு-53 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக உள்ளது.


Next Story