சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை- இருவர் கைது


சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை- இருவர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 9:45 PM IST (Updated: 15 July 2020 9:45 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள  கால்வாய் பாலத்துக்கு அடியில்  சடலமாக மீட்கப்பட்டாள்.  தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை  கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் எழுப்பினர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்துள்ளோம்.  பாலியல் ரீதியாக சிறுமிக்கு துன்புறுத்தல் உள்ளதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே சொல்லமுடியும். தற்போது அதற்கான அடையாளங்கள் இல்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்” என்றார்.


Next Story