தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி


தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி
x
தினத்தந்தி 16 July 2020 9:03 AM IST (Updated: 16 July 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.94.80 சதவீத மாணவிகள், 89.41 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர் மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச்/ ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story