புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பியோடிய ராஜா பிடிப்பட்டார்


புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பியோடிய ராஜா பிடிப்பட்டார்
x
தினத்தந்தி 16 July 2020 6:06 PM GMT (Updated: 2020-07-16T23:36:09+05:30)

புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பியோடிய ராஜா பிடிபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் குற்றவாளி ராஜாவை வாகனத்தில் அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் போலீசாரின் பிடியில் இருந்த ராஜா, திடீரென தப்பி ஓடினார். 

இதையடுத்து அவர் தப்பி ஓடிய வனப்பகுதியில் ஏராளமான போலீசார் முகாமிட்டு தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ராஜா முள்ளூர் காட்டுப்பகுதியில் பிடிபட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story