கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் செல்லூர் ராஜூ


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 17 July 2020 4:32 PM IST (Updated: 17 July 2020 5:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.

சென்னை,

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கடந்த ஜூலை 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லேசான  அறிகுறிகளுடன்  தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜூ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து செல்லூர் ராஜூ குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story