வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்- பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம்


வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்- பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 July 2020 7:29 PM IST (Updated: 17 July 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூர்,

தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை  அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன்(27) தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக வந்தார்.

அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் முகிலன் ஓட்டிவந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், மனமுடைந்த முகிலன் மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த முகிலன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்த நிலையில், மேற்கூறிய சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பிறப்பித்துள்ளார்.


Next Story