கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான உயர்தர மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.
Related Tags :
Next Story