போலியான உரிமம் பெற்ற விவகாரம் பாகிஸ்தானில் மேலும் 15 விமானிகள் பணியிடை நீக்கம்
போலியான உரிமம் பெற்ற விவகாரத்தில் பாகிஸ்தானில் மேலும் 15 விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மே மாதம் 22-ந் தேதி பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு விமானியின் அலட்சியமே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பொது விமானிகளில் 30 சதவீதம் பேர் போலியான விமானி உரிமம் வைத்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். நாட்டில் 262 விமானிகள் ஆள் மாறாட்டம் மூலம் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் போலி உரிமம் வைத்திருந்ததாக 15 விமானிகளை பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று பணி இடைநீக்கம் செய்தது. இவர்களையும் சேர்த்து போலி உரிமம் விவகாரத்தில் இதுவரை 93 விமானிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் போலி உரிமம் விவகாரத்தில் இதுவரை 28 விமானிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story