கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி


கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 July 2020 9:45 AM IST (Updated: 19 July 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து  பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ஒசூர் தனியார் மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 14 வது எம்எல்ஏவாக செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story