வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று


வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 July 2020 2:37 PM IST (Updated: 19 July 2020 2:56 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

முன்னதாக, இன்று காலை   கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில், இதுவரை 15 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Next Story