ரஷியாவில் தவித்த 468 மருத்துவ மாணவர்கள் உள்பட 1,028 பேர் சென்னை வந்தனர்


ரஷியாவில் தவித்த 468 மருத்துவ மாணவர்கள் உள்பட 1,028 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 20 July 2020 2:42 AM IST (Updated: 20 July 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி தமிழகத்தில் மட்டும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 270 பேர், மாணவிகள் 198 பேர்களுடனும், இங்கிலாந்தில் இருந்து 6 குழந்தைகள், 76 பெண்கள் உள்பட 176 பேர்களுடனும், ஓமனில் இருந்து 8 குழந்தைகள், 34 பெண்கள் உள்பட 182 பேர்களுடனும், கத்தாரில் இருந்து 10 குழந்தைகள், 22 பெண்கள் உள்பட 202 பேர்களுடனும் 4 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இதில் வந்த 1,028 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story