தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 20 July 2020 4:53 AM IST (Updated: 20 July 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் இன்றும் (திங்கட்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், கடந்த 2 தினங்களாகவே மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘காங்கேயம் 10 செ.மீ., அரவக்குறிச்சி 8 செ.மீ., வால்பாறை, ஊட்டி தலா 7 செ.மீ., சூளகிரி 6 செ.மீ., வெள்ளக்கோவில் 5 செ.மீ., தேவாலா, ஜிபஜார், அண்ணா பல்கலைக்கழகம், கேத்தி, சோலையாறு தலா 3 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

Next Story