திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி


திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 20 July 2020 10:09 PM IST (Updated: 20 July 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செங்கல்பட்டு,

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், சில தினங்களுக்கு முன் நிலத்தகராறு காரணமாக நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் ஜாமின் மனுவை இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்தார். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன், மீது 5 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story