பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா நியமனம்


பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா நியமனம்
x
தினத்தந்தி 20 July 2020 11:20 PM IST (Updated: 20 July 2020 11:20 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story