மழைநீரில் ஆட்டம் போடுகிறார்களா? குழந்தைகளை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கும் பெற்றோர் காய்ச்சல், இருமல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனம்
மழையில் குழந்தைகள் ஆட்டம் போடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை,
மழையில் குழந்தைகள் ஆட்டம் போடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா புரையோடிக் கிடக்கும் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கையே தொலைந்து விட்டது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
பட்டாம் பூச்சிகள் போல துள்ளி திரிந்து விளையாடக்கூடிய குழந்தைகளும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்க்கு பயந்து வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். தற்போது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தாலும், விரும்பியபடி மழையில் நனைந்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் குழந்தைகள் மனதில் எழாமல் இல்லை.
ஏற்கனவே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். இதனால் தற்போது பெய்து வரும் மழையில் குழந்தைகள் நனைந்துவிடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள்.
சமையல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது, குழந்தைகள் தங்களை ஏமாற்றிவிட்டு நழுவி வெளியே ஓடிவிடுகிறார்கள் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டு போட்டு கதவை மூடி விடுகிறார்கள்.
தேங்கி இருக்கும் மழை நீரிலும் குழந்தைகள் சென்று விளையாடாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் வீடுகளில் இருந்தபடியே மழையை ரசிக்க வேண்டிய நிலைமைக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் இருந்தால் வராதீர்கள் என்று சில ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளை கோழி அடைகாக்கும் முட்டைகளை போல மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் லேசாக இருமினாலும் மனம் பதறுகிறது. குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து குழந்தைகளிடம் நாங்கள் கண்டிப்பாக நடந்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை“, என்றனர்.

Related Tags :
Next Story