மின் கட்டணம் அதிகமாக செலுத்தப்பட்டிருந்தால் எதிர்வரும் மின் கணக்கீட்டில் கூடுதல் தொகை சரி செய்யப்படும் அமைச்சர் பி.தங்கமணி அறிக்கை
மின் கட்டணம் ஏற்கனவே அதிகமாக செலுத்தப்பட்டிருந்தால், எதிர்வரும் மின் கணக்கீட்டில் அந்த தொகை சரி செய்யப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவாமல் இருக்கத்தான், ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை. அதற்கு பதில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள், தங்களுடைய ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீட்டு பட்டியலின்படி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டது.
தற்போது, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் அளவீடு 4 மாதங்களுக்கு உள்ள மின் பயன்பாடு என்பதால், 4 மாத காலத்திற்கான மின் நுகர்வு, 2 மாதங்களுக்கு என்ற அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும், 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக் கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.
மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத்தொகை சரி செய்யப்படும். மேற்கண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கணக்கீட்டு முறை தவறு என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மேற்குறிப்பிட்ட கணக்கீட்டு முறை சரியானது என்பதனை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஐகோர்ட்டு தெள்ளத்தெளிவாக தனது தீர்ப்பைக் கூறிய பிறகும், மின்சாரக் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரம் இவ்வாறு மிகத் தெளிவாக இணையதளத்தில் வெளியிட்ட பின்னரும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் திரும்பத்திரும்ப ‘மின்சார ரீடிங்’ எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனர்‘ எனவும், ‘தவறான அடிப்படையில் கணக்கீடு’ எனவும், ‘மின்சார வாரியத்திற்கு லாபம்’ எனவும் உண்மைக்கு மாறான செய்தியை கூறிக்கொண்டிருப்பது, மக்களை குழப்ப முயல்வதுதான். ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது.
எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா காலத்திற்கு மட்டுமே வெறும் 80 யூனிட்டுகள் சலுகையாக வழங்கும் கேரளத்தைப் போன்றும், மின் கட்டணத்தில் 57 சதவீதம் மட்டுமே குறைத்து சலுகை வழங்கும் மராட்டியத்தை போன்றும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும், 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் ரூ.500 செலுத்தினால் போதும். ஆனால், இதேபோல் 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் கேரளாவில் ரூ.1,165-ம், மராட்டியத்தில் ரூ.1,776-ம் கட்டணமாக செலுத்துகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டை விட மிக அதிக வீட்டு மின்கட்டண விகிதப்பட்டி உள்ள மராட்டியம் மற்றும் கேரளத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? அவர்களைப் போல் தமிழ்நாட்டிலும் மிக அதிக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story