திறக்க அனுமதிக்கப்பட்ட கோவில் வளாகத்தில் திருவிழாக்கள் நடத்த அனுமதி சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறநிலையத்துறை உத்தரவு
தமிழகத்தில் திறக்க அனுமதிக்கப்பட்ட கோவில்களில் திருவிழாக்களை கோவில் வளாகத்திலேயே நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் நலன் கருதி கடந்த சில மாதங்களாக கோவில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் தினசரி பூஜைகள் மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் தினசரி தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்கும், முகக்கவசம் அணிந்தும், கொரோனா தாக்குதலை தவிர்த்திட அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இதர பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தும் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் க.பணீந்திர ரெட்டி, அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில்களில் நடைபெற வேண்டிய திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை காணொலி பதிவுகளை யு-டியூப் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டியும் கமிஷனர் அலுவலகத்துக்கு கோவில் செயல் அலுவலர்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
கோவில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி கோவில் வளாகத்திற்குள் நடைபெற வேண்டும்.
திருவிழாக்களின் போது குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன், முகக்கவசம் அணிந்தும், 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்து நடத்த வேண்டும்.
விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம். நோய் தொற்று பரவலை தடுக்க அரசு வழிகாட்டி உள்ள நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தால் அந்த அனுமதியை பெற்று திருவிழாக்கள் நடத்த வேண்டும்.
விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காணும் வகையில் இணையதளம் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story