13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் 8 தொழில் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீட்டில் 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
சென்னை,
தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீட்டில் 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம் 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து செயல்படுத்தும் பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மும்பையைச் சேர்ந்த, ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ என்ற நிறுவனம், கொரோனா தொற்று காலத்திலும், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், மராட்டியத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே 27-ந் தேதியன்று தொழில்துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம் சுமார் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் முன்னிலையில் நேற்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு ‘காணொலிக்’ காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள ‘இண்டோஸ்பேஸ்’ தொழிற் பூங்காவில் ‘விக்ரம் சோலார்’ நிறுவனம் ரூ.5,423 கோடி முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘சோலார் செல்ஸ்‘ மற்றும் ‘மாட்யூல்ஸ்‘ உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த இந்த பொருட்கள் இனி தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
* காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ‘சிஜிடி சத்ராய் பிரைவேட் நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* கோவை மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘அக்குவாசப்’ நிறுவனத்தின் ‘டக்டைல் ஐயர்ன் பவுண்டரி’ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘என்ஆர்டி இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.36 கோடி முதலீட்டில் 465 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ஜிஐ அக்ரோடெக்’ நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில்-ஒரகடம் நெடுஞ்சாலையில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ஹைரானந்தனி’ குழுமத்தை சேர்ந்த ‘யோட்டா’ நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* கோவை மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘இஎல்ஜிஐ எக்யூப்மெண்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘ஏர் கம்ப்ரஷர்“ உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* ஈரோடு மாவட்டம் ‘சிப்காட்’ பெருந்துறை தொழிற்பூங்காவில் ரூ.40 கோடி முதலீட்டில் ‘ஜெஎஸ் ஆட்டோ காஸ்ட்’ நிறுவனத்தின் பவுன்ட்ரி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், என மொத்தம் 8 திட்டங்களின் மூலம் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீடுகள் மற்றும் சுமார் 13 ஆயிரத்து 507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story