காஞ்சீபுரத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு


காஞ்சீபுரத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2020 3:06 PM IST (Updated: 21 July 2020 3:06 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் இன்று ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தமிழகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,921 ஆண்கள், 2,064 பெண்கள் என 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 49 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 70 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.  இதுவரையில் 2,551 பேர் உயிரிழந்துள்ளனர்.  1 லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 348 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.  காஞ்சீபுரத்தில் இன்று ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,356 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரத்தில், கொரோனா பாதிப்புகளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,448 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story