தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது


தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 22 July 2020 11:07 AM IST (Updated: 22 July 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

தேனி,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. 

தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 4 அரசு மருத்துவர்கள் உள்பட 188 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,047 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 1,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தேனியில் தற்போது வரை 1,564 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story